Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Illathiranthaal Yesuve Lyricsநீர் இல்லாதிருந்தால் இயேசுவே

Artist to be confirmedThanksgivingFaithCross

Illathiranthaal Yesuve Lyrics in Tamil & English

Chorus

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே

நான் இல்லாதிருந்திருப்பேன் (×2)

Neer illaathirunthaal yesuvae

Naan illaathirunthiruppaen (×2)

Bridge

உம் அன்பில்லாதிருந்தால் இயேசுவே

உம் தயவில்லாதிருந்தால் இயேசுவே (×2)

என் பாவத்தில் மரித்திருப்பேன்

நிர்மூலமாயிருப்பேன் (×2)

Um anpillaathirunthaal yesuvae

Um thayavillaathirunthaal yesuvae (×2)

En paavaththil mariththiruppaen

Nirmoolamaayiruppaen (×2)

Verse 1

பார்வோன் சேனைக்கு என்னை விலக்கிமீட்டீரே

உம் அற்புத வல்லமையால் என்னை நடத்திச்சென்றீரே (×2)

அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பமாய் சூழ்ந்துக்கொண்டீரே

புதுவாழ்வு தந்து உம்மைத் துதிக்கச்செய்தீரே (×2)

Paarvon saenaikku ennai vilakkimeetteerae

Um arputha vallamaiyaal ennai nadaththichendreerae (×2)

Akkinisthambam maegasthambamaay soozhnthukkondeerae

Puthuvaazhvu thanthu ummaith thuthikkacheytheerae (×2)

Verse 2

நீர் சிலுவையில் தொங்கையில்

என் நினைவாயிருந்தீரே

எனக்காய் உம்மையே பலியாய் தந்தீரே (×2)

என் பாவம் சாபம் அனைத்தையும் பரிகரித்தீரே

பிதாவோடு என்னை ஒப்புரவாகச்செய்தீரே (×2)

Neer siluvaiyil thongaiyil

En ninaivaayiruntheerae

Enakkaay ummaiyae paliyaay thantheerae (×2)

En paavam saabam anaiththaiyum parigariththeerae

Pithaavodu ennai oppuravaagacheytheerae (×2)

Verse 3

அக்கினிச்சூளையில் என்னைக் காக்கவந்தீரே

நான்காம் நபராய் என்னோடு நின்றீரே (×2)

உம் வல்லக்கரத்தால் என்னைக் காத்து உயர்த்தி வைத்தீரே

நீரே தெய்வமென்று என்னைப்பாட வைத்தீரே (×2)

Akkinichoolaiyil ennaik kaakkavantheerae

Naangaam nabaraay ennodu nindreerae (×2)

Um vallakkaraththaal ennaik kaaththu uyarththi vaiththeerae

Neerae theyvamendru ennaippaada vaiththeerae (×2)

Verse 4

நீர் செய்த நன்மைகள் அவை எண்ணில் அடங்காது

ஒவ்வொன்றாய்ச் சொல்ல எனதாயுள் பத்தாது (×2)

நான் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய்ச் செய்தீரே

உந்தன் புகழை நான் என்றும் பாடுவேன் (×2)

Neer seytha nanmaigal avai ennil adangaathu

Ovvondraays solla enathaayul paththaathu (×2)

Naan vaenduvatharkum ninaippatharkum athigamaays seytheerae

Unthan pugazhai naan endrum paaduvaen (×2)

Illathiranthaal Yesuve PPT – PowerPoint Slides

Download நீர் இல்லாதிருந்தால் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I