Paavikku Pukalidam Lyrics in Tamil & English
Chorus
பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே
பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே
Paavikkup pugalidam en yesu ratchagar
Paarinil paliyaaga maandaarae
Parisuththarae paavamaanaarae
Paaramaana siluvai sumanthavarae
Verse 1
காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தர் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கதா மலைக்கு இயேசுவை (×2)
Kaattik koduththaan muppathu vellik
Kaasukkaagavae karththar yesuvai
Kolai seyyavae kondu ponaarae
Kolkathaa malaikku yesuvai (×2)
Verse 2
கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுங்காயமும் அடைந்தாரே (×2)
Kallar maththiyil oru kallan pol
Kutramatra kiristhaesu thonginaar
Parigaasamum pasithaagamum
Padungaayamum adainthaarae (×2)
Verse 3
கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முள்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக் கானும் உள்ளம் தாங்குமோ (×2)
Kaalkal kaigalil aani paaynthida
Kireedam mulkalil pinni soodida
Iraththa vellaththil karththar thonginaar
Ithaik kaanum ullam thaangumo (×2)
Verse 4
உலகத்தின் இரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உன்னைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா (×2)
Ulagaththin ratchagar yesuvae
Uyir koduththaar uyirththezhunthaar
Thammai nambinaal unnaik kaividaar
Thalaraamal nambi odi vaa (×2)
Verse 5
பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தர் இயேசுவண்டை ஓடி வா (×2)
Paava saabangal theeraa viyaathigal
Pala tholvigal unthan vaazhkkaiyil
Kandu nee manam kalanguvathaen
Karththar yesuvandai odi vaa (×2)
Verse 6
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டையில் எங்கிறார்
இளைப்பாறுதல் தரும் இயேசுவை
இன்று தேடி நாடி நம்பி வா (×2)
Varuththappattu paaram sumapporae
Vaarungal ennandaiyil engiraar
Ilaippaaruthal tharum yesuvai
Indru thaedi naadi nambi vaa (×2)
Paavikku Pukalidam PPT – PowerPoint Slides
Download பாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.