Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thaasan Puvi Lyricsதாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்த

Artist to be confirmedThanksgivingPraiseFaith

Thaasan Puvi Lyrics in Tamil & English

Chorus

தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்த

மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர

Thaasan puviyoril maa neesanenaip pidiththa

Mosam nivirththi seytha yaesukrubaasamuthra

Verse 1

மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுவித்தார்;

வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார்,

சரணமென்றே புது உயிர் தனைக் கொடுத்தார்

சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார்

Maranam pidiththumennai vallavan viduviththaar;

Valiya paathaalam nindrae magimaiyaa yeduththaar,

Saranamendrae puthu uyir thanaik koduththaar

Sathru enakkus saetham puriyaathu thaduththaar

Verse 2

பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்?

பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்?

தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம்,

செப்புவேன் இங்குமங்கும் எளியனின் தோத்ரம்

Paathaga nenakkundo konjsamum paaththiram?

Paranarul nanmaik kippaavi emmaaththiram?

Theethan rusiththa nalam anpu maa kaaththiram,

Seppuvaen ingumangum eliyanin thothram

Verse 3

அடியனுக்கவர் செய்த அன்புரைத்தாமோ?

ஆயிரம் நாவினால் சொல்வது போமோ?

இடிதனைத் தாங்கிட மனிதரா லாமோ?

இயேசெனைத் தாங்கையில் என்னுயிர் போமோ?

Adiyanukkavar seytha anpuraiththaamo?

Aayiram naavinaal solvathu pomo?

Idithanaith thaangida manitharaa laamo?

Yesenaith thaangaiyil ennuyir pomo?

Verse 4

உள்ளும் புறம்புமான எந்த வில்லங்கம்

உலகிலெனக்கு வரும்? எவ்விதப் பங்கம்

தள்ளியே காத்திடும் தகும் யூதா சிங்கம்,

தாரணியினில் தனக்கிணையிலாத் தங்கம்

Ullum purambumaana entha villangam

Ulagilenakku varum? evvithap pangam

Thalliyae kaaththidum thagum yoothaa singam,

Thaaraniyinil thanakkinaiyilaath thangam

Thaasan Puvi PPT – PowerPoint Slides

Download தாசன் புவியோரில் மா நீசனெனைப் பிடித்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T