Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Rajyam Varunkaalai Lyricsஉம் ராஜ்யம் வருங் காலை

Artist to be confirmedCrossFaith

Um Rajyam Varunkaalai Lyrics in Tamil & English

Verse 1

உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரே

அடியேனை நினையும் என்பதாய்

சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே

விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.

Um raajyam varung kaalai karththarae

Adiyaenai ninaiyum enpathaay

Saagum kallan visvaasa nokkaalae

Vin maatchi kandu sonnaan thelivaay.

Verse 2

அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்

எவ்வடையாளமும் கண்டிலாரே;

தம் பெலனற்ற கையை நீட்டினார்;

முட்கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.

Avar or raajaa endru solluvaar

Evvadaiyaalamum kandilaarae;

Tham pelanatra kaiyai neettinaar;

Mudkireedam netri soozhnthu peeritrae.

Verse 3

ஆனாலும், மாளும் மீட்பர் மா அன்பாய்

அருளும் வாக்கு, ‘இன்று என்னுடன்

மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்’

என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.

Aanaalum, maalum meedpar maa anpaay

Arulum vaakku, ‘indru ennudan

Meyyaay nee paratheesiliruppaay’

Enpathuvaam visvaasaththin palan.

Verse 4

கர்த்தாவே, நானும் சாகும் நேரத்தில்,

‘என்னை நினையும்’ என்று ஜெபித்தே

உம் சிலுவையை, தியானம் செய்கையில்,

உம் ராஜியத்தைக் கண்ணோக்கச் செய்யுமே.

Karththaavae, naanum saagum naeraththil,

‘ennai ninaiyum’ endru jebiththae

Um siluvaiyai, thiyaanam seykaiyil,

Um raajiyaththaik kannokkas seyyumae.

Verse 5

ஆனால், என் பாவம் நினையாதேயும்,

உம் ரத்தத்தால் அதைக் கழுவினீர்;

உம் திரு சாவால் பாவமன்னிப்பும்

ரட்சிப்பும் எனக்காய்ச் சம்பாதித்தீர்.

Aanaal, en paavam ninaiyaathaeyum,

Um raththaththaal athaik kazhuvineer;

Um thiru saavaal paavamannippum

Ratchippum enakkaays sambaathiththeer.

Verse 6

’என்னை நினையும்’, ஆனால், உமக்கும்

என்னால் உண்டான துன்பம் கொஞ்சமோ?

சிலுவை, நோவு, ரத்த வேர்வையும்,

சகித்த நீர், இவை மறப்பீரோ?

’ennai ninaiyum’, aanaal, umakkum

Ennaal undaana thunpam konjsamo?

Siluvai, novu, raththa vaervaiyum,

Sagiththa neer, ivai marappeero?

Verse 7

’என்னை நினையும்’, நான் மரிக்கும் நாள்

‘நீயும் என்னோடு தங்குவாய் இன்றே

நற்பரதீஸில்’ என்னும் உம் வாக்கால்

என் ஆவி தேர்ந்து மீளச் செய்யுமே.

’ennai ninaiyum’, naan marikkum naal

‘neeyum ennodu thanguvaay indrae

Narparatheesil’ ennum um vaakkaal

En aavi thaernthu meelas seyyumae.

Um Rajyam Varunkaalai PPT – PowerPoint Slides

Download உம் ராஜ்யம் வருங் காலை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U