Appa Thayaala Gunaanantha Lyrics in Tamil & English
Verse 1
அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லா
இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா?
Appaa, thayaala kunaanantha monantha vaethaa,-pollaa
Ippaaril kaaypaamun aegineero, aesunaathaa?
Verse 2
குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்
செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ?
Kutram sumaththap poys saatchigalaith thaedinaaro?-anthas
Setralar ellaam thirandaegamaayk koodinaaro?
Verse 3
கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறி
மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி?
Kannam athaiththatho? kangal sivanthatho? suvaami,-pori
Minnik kalangi, visanam utreero, nan naemi?
Verse 4
மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்
பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே.
Meyyaana saatchi ittaiyanae, sonna um meethae-theeyar
Poyyaana saatchi ittaiyo, sumaththinaar theethae.
Verse 5
என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்
பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு போனாரோ?
En kattai neekkieedaetra vaathaikkullaaneero?-ummaip
Pin kattaayk katti, pilaaththidangondu ponaaro?
Verse 6
இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே,-என்றன்
கர்த்தனே, உன் மீதில் வந்ததையோ, தேவ கோபமே?
Iththanai paadugal neer patta thengodum paavamae,-endran
Karththanae, un meethil vanthathaiyo, thaeva kobamae?
Verse 7
நீர் பட்ட பாட்டைப்போல், ஆர் பட்டுத்தாங்குவார், தேவே?-பல
கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே, கோவே.
Neer patta paattaippol, aar pattuththaanguvaar, thaevae?-pala
Kaarpatta nenjsamum seerpattup pogumae, kovae.
Appa Thayaala Gunaanantha PPT – PowerPoint Slides
Download அப்பா தயாள குணாநந்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.