Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nambikaiyinal Nee Valvu Peruvai Lyricsநம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

Also searched as: Nambikkaiyinaal Nee, Nampikkaiyinaal Nee Vaazhvu Peruvaay

Nambikaiyinal Nee Valvu Peruvai Lyrics in Tamil & English

Chorus

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

நண்பனே நீ பயப்படாதே

பயம் வேண்டாம் திகில் வேண்டாம்

படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்

Nambikkaiyinaal nee vaazhvu peruvaay

Nanpanae nee payappadaathae

Payam vaendaam thigil vaendaam

Padaiththavar unnai nadaththis selvaar

Verse 1

அதிசயக் கல்வாரி சிலுவையிலே

அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்

தழும்புகளால் நீ சுகமானாய்

தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய்

Athisayak kalvaari siluvaiyilae

Anaiththaiyum seythu mudiththuvittaar

Thazhumbugalaal nee sugamaanaay

Thayavinaal marubadi piranthuvittaay

Verse 2

ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்று

அறிக்கை செய்து சுகமடைந்தான்

ஒருத்துளி சந்தேகமில்லாமலே

ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்

Aadaiyaith thottaal nalam peruvaen -endru

Arikkai seythu sugamadainthaan

Oruththuli santhaegamillaamalae

Odivaa yesu indru sugam tharuvaar

Verse 3

ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெற

ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்

வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்

ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் -உன்

Aabiragaam saaraal kuzhanthaip pera

Aatral petrathu nambikkaiyinaal

Vaakkuthaththam seythavar nambaththakkavar

Aekkamellaam eppadiyum niraivaetruvaar -un

Verse 4

கட்டாந்தரையில் நடப்பதுபோல்

கடலைக் கடந்தனார் நம்பிக்கையினால்

எரிகோ மதில்கள் விழுந்தனவே

ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்

Kattaantharaiyil nadappathubol

Kadalaik kadanthanaar nambikkaiyinaal

Erigo mathilkal vizhunthanavae

Aezhunaal oorvalam vanthathinaal

Verse 5

உலகிலே இருக்கும் அவனை விட

உனக்குள் இருப்பவர் பெரியவரே

துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்

துரிதமாய் வெற்றி காணச் செய்வார்

Ulagilae irukkum avanai vida

Unakkul iruppavar periyavarae

Thunai nindru unakkaay yuththam seyvaar

Thurithamaay vetri kaanas seyvaar

Verse 6

மலையைப் பார்த்து கடலில் விழு

என்று சொன்னால் நடந்திடுமே

உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே

நம்பினால் எல்லாம் நடந்திடுமே

நம்பிக்கையினால் நாம் வாழ்வு பெறுவோம்

நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்

பயம் இல்லையே திகில் இல்லையே

படைத்தவர் நம்மை நடத்தி செல்வார்

Malaiyaip paarththu kadalil vizhu

Endru sonnaal nadanthidumae

Unnaalae koodaathathu ondrumillaiyae

Nambinaal ellaam nadanthidumae

Nambikkaiyinaal naam vaazhvu peruvom

Nalamudan vaazhnthu jeyam eduppom

Payam illaiyae thigil illaiyae

Padaiththavar nammai nadaththi selvaar

Nambikaiyinal Nee Valvu Peruvai PPT – PowerPoint Slides

Download நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Nambikaiyinal Nee Valvu Peruvai meaning பாடலின் பொருள்

chorus

The singer encourages a friend: by faith you will truly live, so do not be afraid. There is no need for fear or dread, because the Creator will lead you.

நம்பிக்கையால் வாழ்வு பெறுவாய், பயப்படாதே, படைத்தவர் உன்னை நடத்துவார்.

verse

On the wondrous cross of Calvary, Jesus finished everything. By his wounds you are healed, and by his grace you have been born again, echoing Isaiah 53:5.

கல்வாரி சிலுவையில் இயேசு எல்லாம் முடித்தார்; அவர் தழும்புகளால் சுகமும் கிருபையால் புதுப்பிறப்பும் பெற்றாய்.

verse

This recalls the sick person who said, 'If I only touch his garment, I will be healed,' and was healed (Mark 5:28). The listener is urged to come to Jesus without a drop of doubt, for he will heal today.

ஆடையைத் தொட்டு சுகம் பெற்றவர் போல சந்தேகமின்றி இயேசுவிடம் வா, அவர் இன்று சுகம் தருவார்.

verse

Abraham and Sarah received strength to have a child through faith, echoing Hebrews 11:11. The One who made the promise is faithful and will surely fulfil all your longings.

விசுவாசத்தால் ஆபிரகாமும் சாராளும் பிள்ளை பெற்றனர்; வாக்குரைத்தவர் உன் ஏக்கங்களை நிறைவேற்றுவார்.

verse

By faith the Israelites crossed the sea as if walking on dry ground, and the walls of Jericho fell after they marched around them for seven days, echoing Hebrews 11:29–30.

விசுவாசத்தால் இஸ்ரவேலர் கடலைக் கடந்தனர், எரிகோ மதில்களும் விழுந்தன.

verse

The One who lives in you is greater than the one who is in the world, echoing 1 John 4:4. He will stand beside you, fight for you and quickly give you victory.

உன்னில் இருப்பவர் உலகில் இருப்பவனைவிட பெரியவர்; அவர் உனக்காகப் போரிட்டு வெற்றி தருவார்.

verse

If you tell a mountain to fall into the sea, it will happen, echoing Jesus' words in Mark 11:23, and nothing is impossible for the one who believes. The chorus returns in the first person: by faith we will live well, win the victory and have no fear, because the Creator leads us.

நம்பினால் மலையும் கடலில் விழும், எல்லாம் நடக்கும்; பயமின்றி படைத்தவர் நடத்துதலில் ஜெயத்துடன் வாழ்வோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைளைச்செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

    And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I [am] the LORD that healeth thee.

    Exodus 15:26 (யாத்திராகமம் 15:26)

Faith verses in Tamil →Healing verses in Tamil →

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with N