Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Semmariyin Virunthukku Alaikkapetror Lyricsசெம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்

Artist to be confirmedWorshipPraise

Semmariyin Virunthukku Alaikkapetror Lyrics in Tamil & English

Chorus

செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்

அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க (×2)

Semmariyin virunthukku azhaikkappetror paerubetror

Avvirunthai undida sendriduvom inpam ponga (×2)

Verse 1

இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன

உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன (×2)

உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் (×2)

உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய்

Iraivan tharum virunthithu athai unnath thadaiyenna

Uraiya varum iraivanai naam aerkath thadaiyenna (×2)

Ullak kathavu thiranthathu athan ullae vaazhuvaay (×2)

Uvagai ennum oli konarnthu emmai aaluvaay

Verse 2

வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே

வளமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே (×2)

எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே (×2)

உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே

Vaanam pozhiya poomi vilaiya valamum pongumae

Valamae varum oliyaal solai malarum engumae (×2)

Enthan unavaay nee vanthaalae inpam thangumae (×2)

Unthan arulai vithaiththaal intha ulagam uyyumae

Verse 3

உலகம் எல்லாம் இணைவது உன் உள்ளம் ஒன்றிலே

இயற்கை நிறைவு கொள்வது உன் செயலின் பண்பிலே (×2)

மனித உள்ளம் மகிழ்வது உன் புனித உறவிலே (×2)

மறையும் வாழ்வு மலர்வது உன் மகிழ்வின் பங்கிலே

Ulagam ellaam inaivathu un ullam ondrilae

Iyarkai niraivu kolvathu un seyalin panpilae (×2)

Manitha ullam magizhvathu un punitha uravilae (×2)

Maraiyum vaazhvu malarvathu un magizhvin pangilae

Semmariyin Virunthukku Alaikkapetror PPT – PowerPoint Slides

Download செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S