Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Baaram Illaiya Lyricsபாரம் இல்லையா

Pr.Lucas SekarFaithHoly Spirit

Baaram Illaiya Lyrics in Tamil & English

Verse 1

பாரம் இல்லையா பாரம் இல்லையா

தேசம் அழிகின்றது

யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்

என்ற சத்தம் தொனிக்கின்றது

கிருபை வாசல் அடைகிறதே

நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே

இந்த நாளில் மௌனமாய் இருந்தால்

அழிவு என்பது நிச்சயமே (×2)

Paaram illaiyaa paaram illaiyaa

Thaesam azhigindrathu

Yaarai anuppuvaen yaarai anuppuvaen

Endra saththam thonikkindrathu

Kirubai vaasal adaigirathae

Niyaayaththeerppu nerungiduthae

Intha naalil maunamaay irunthaal

Azhivu enpathu nichayamae (×2)

Chorus

சேனையாய் எழும்புவோம்

யுத்த களத்தில் (×2)

அழியும் கோடி மாந்தரை மீட்க

இன்றே புறப்படுவோம்

அழியும் கோடி மாந்தரை மீட்க

இன்றே ஜெபித்திடுவோம்

எங்கள் பாரதம் எங்கள் பாரதம்

இயேசுவின் பாரதம் (×4)

Saenaiyaay ezhumbuvom

Yuththa kalaththil (×2)

Azhiyum kodi maantharai meedka

Indrae purappaduvom

Azhiyum kodi maantharai meedka

Indrae jebiththiduvom

Engal paaratham engal paaratham

Yesuvin paaratham (×4)

Verse 2

திறப்பில் நின்று சுவரை அடைக்க

தேவன் தேடும் மனிதன் எங்கே (×2)

கண்ணீர் சிந்த ஆளில்லை

கதறி ஜெபிக்க ஆளில்லை (×2)

யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்

என்ற சத்தம் தொனிக்கின்றதே (×2)

Thirappil nindru suvarai adaikka

Thaevan thaedum manithan engae (×2)

Kanneer sintha aalillai

Kathari jebikka aalillai (×2)

Yaarai anuppuvaen yaarai anuppuvaen

Endra saththam thonikkindrathae (×2)

Verse 3

அறுவடையின் காலம் அல்லோ

முடங்கி கிடப்பது நியாயம் தானா (×2)

பாதங்கள் வெண்கலமாகும்

இடைவிடாமல் போரடி (×2)

வாயில் துதியும் கையில் பட்டயம்

எழுந்து நின்று போரடிப்போம் (×2)

Aruvadaiyin kaalam allo

Mudangi kidappathu niyaayam thaanaa (×2)

Paathangal vengalamaagum

Idaividaamal poradi (×2)

Vaayil thuthiyum kaiyil pattayam

Ezhunthu nindru poradippom (×2)

Baaram Illaiya PPT – PowerPoint Slides

Download பாரம் இல்லையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr.Lucas Sekar

More Tamil Christian songs starting with B